Category: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மை பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக்கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக…

சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு   மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி

விசேட தேவையுடையவர்களினால் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பினை மிகுந்த கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்த வண்ணமே விசேட தேவையுடையவர்களுடனும் அவர்களது குடும்ப உறவினர்களுடனும் இணைந்து இவ்வருட சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம்.  “விசேட தேவையுடையோர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களது தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு 2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுதல்” 2019ஆம் ஆண்டின் சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தின் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் திகதி நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக…