இன்று (30) பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றை நாட்டினார். இங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தூதரக பணியின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் பணிக்குழாம்…
ஜனாதிபதி இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார்
