ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டு

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டு

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும்.

இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இவ்வாறு குடிநீர் போத்தல்கள் வழங்குதலை தடைசெய்வதற்கும் அதற்குப் பதிலாக கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.

ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இதனால் சுற்றாடலில் ஒன்றுசேரும் பிளாஸ்டிக் போத்தல்களின் அளவு பெருமளவில் குறைவடையும். “வனவிலங்குகள் பாதுகாப்பு ஒன்றியம்”, “புவி தோழர்கள்”, “தம்பபன்னி இயற்கை கழகம்” போன்ற அமைப்புக்களும் சூழலியலாளர்களும் சுற்றாடல் நேயமிக்கவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share This Post