புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

புதிய பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

சீ.டீ. விக்ரமரத்ன இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராவார்.

1986 ஆம் ஆண்டு பயிலுனர் உதவி பொலிஸ் அதிகாரியாக சேவையில் இணைந்துகொண்ட அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தினதும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினதும் பட்டதாரியாவார்.

மேலும் பிரட்பேர்ட் பல்கலைக்கழகத்திலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திலும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கற்கைநெறிகளை பயின்றுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் புதிய பொலிஸ் மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் கின்னமொன்றை வழங்கினார்.

 

Share This Post