ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சமயக் கிரியைகளை தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பங்குபற்றினார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்த, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, தயாசிறி ஜயசேகர, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதிகளின் செயலாளர்களான லலித் வீரதுங்க, உதய ஆர்.செனெவிரத்ன, புதிய செயலாளர்கள் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, எஸ்.ஆர்.ஆட்டிகல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post