அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை…

அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை…

காலம்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) முற்பகல் இறுதி மரியாதையை செலுத்தினார்.

அமைச்சரின் பூதவுடல் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிலிருந்து இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணிக்குழாமினர் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Post