ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்

பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை பிரதான நான்கு விகாரைகளின் பஸ்நாயக்க நிலமேகளுடன் தியவடன நிலமே பிரதீப் நிலங்கதேல வரவேற்றார். ஜனாதிபதி அவர்கள் இன்று மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் மற்றும் இலங்கை ராமாஞ்ஞய மகாநிக்காய ஆகியவற்றின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து அவர்களது நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

Share This Post